உள்ளூர் செய்திகள்

பா.ஜ.க. ஆலோசனை கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் பேசினார்.

அண்ணாமலைக்கு சிறப்பான வரவேற்பு

Published On 2023-11-15 09:47 GMT   |   Update On 2023-11-15 10:37 GMT
  • 4-வது கட்ட நடைப்பயணத்தை அண்ணாமலை வருகிற 25-ந் தேதி திருவையாறில் தொடங்குகிறார்.
  • தஞ்சையில் 5 நாடகள் நடைப்பயணம் நடத்தும் மாநில தலைவர் அண்ணாமலைக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும்.

தஞ்சாவூர்:

தஞ்சை தொகுதியில் என்மண், என்மக்கள் 4-வது கட்ட நடைப்பயணத்தை அண்ணாமலை வருகிற 25-ந் தேதி திருவையாறில் தொடங்குகிறார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது தொடர்பாக தஞ்சை சட்டமன்ற பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட தலைவர் ஜெய்சதீஷ் தலைமையில் தஞ்சையில் நடைபெற்றது.

இதில் மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இந்த கூட்டத்தில், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை என்மண், என்மக்கள் என்ற நடைபயணத்தின் 4-கட்ட பயணத்தை இன்று அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் இருந்து தொடங்குகிறார்.

தஞ்சை மாவட்டத்தில் அவர் 5 நாட்கள் இந்த நடைபயணத்தை மேற்கொள்கிறார்.

திருவையாறில் வருகிற 25-ந் தேதி (சனிக்கிழமை) காலை நடைப்பயணத்தை தொடங்கும் அவர் மாலை 4 மணிக்கு தஞ்சை கொடிமரத்துமூலை, வடக்குவீதி, தெற்குவீதி வழியாக நடைப்பயணம் மேற்கொண்டு மாமாசாகேப்மூலையில் பேசுகிறார்.

அன்று இரவு தஞ்சையில் தங்கும் அவர் மறுநாள் 26-ந் தேதி ஒரத்தநாடு தொகுதியிலும், மாலையில் மன்னார்குடியில் நடைப்பயணம் மேற்கொள்கிறார்.

27-ந் தேதி பேராவூரணி, பட்டுக்கோட்டை பகுதிகளில் நடைப்பயணம் மேற்கொள்கிறார்.

பின்னர் டிசம்பர் 1-ந் தேதி பாபநாசம் தொகுதியிலும், 2-ந் தேதி கும்பகோணம், திருவிடைமருதூர் தொகுதிகளிலும் நடைப்ப யணம் மேற்கொள்கிறார். தஞ்சை மாவட்டத்தில் 5 நாடகள் நடைப்பயணம் மேற்கொள்ளும் மாநில தலைவர் அண்ணாமலைக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும். ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

இதில் நிர்வாகிகள் பாரதிமோகன், ரெங்கராஜன், ராஜேஸ்வரன், உமாபதி, முரளிதரன், மாயக்கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News