உள்ளூர் செய்திகள்

கோவை செல்வபுரம் பகுதியில் கொள்ளையடிக்க பதுங்கி இருந்த கும்பல் சிக்கியது

Published On 2023-08-18 14:56 IST   |   Update On 2023-08-18 14:56:00 IST
  • ஆயுதங்கள் மற்றும் பூட்டை உடைக்க பயன்படுத்தும் கருவிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
  • 7 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

கோவை.

கோவை செல்வபுரம் போலீசார் நேற்று இரவு அந்த பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது தெலுங்குபாளையம்,சாஸ்தா நகர்,புல்லுக்காடுபகுதியில் பதுங்கி இருந்த சிலர் ஓட்டம் பிடித்தனர்.

எனவே அவர்களில் 6 பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அப்போது அவர்களிடம் ஆயுதங்கள் மற்றும் பூட்டை உடைக்க பயன்படுத்தும் கருவிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து போலீசார் மேற்கண்ட 6 பேரையும் காவல்நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். இதில் அவர்கள் உக்கடம் புல்லுக்காடு பகுதியைச் சேர்ந்த பீர்முகமது (வயது 26), ,தெலுங்குபாளையம் தனஞ்செயன் (31), செல்வபுரம் மாணிக்கம் (31,), திருச்சி ரோடு ஜான் ஜோசப் (32), தெலுங்கு பாளையம் ஜெகன் (26), செல்வபுரம் மணிகண்டன் (29) மற்றும் 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது.

போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் அவர்கள் சாஸ்தா நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டை உடைத்து கொள்ளை அடிப்பதற்காக சதி திட்டம் தீட்டி பதுங்கி இருப்பது தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து பூட்டிய வீட்டை உடைத்து கொள்ளை அடிப்பதற்காக பதுங்கி இருந்த 7 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

Tags:    

Similar News