உள்ளூர் செய்திகள்

திட்டக்குடி அருகே வெள்ளாற்றில் மணல் திருடிய கும்பல் கைது

Published On 2022-08-28 08:08 GMT   |   Update On 2022-08-28 08:08 GMT
  • திட்டக்குடி அருகே வெள்ளாற்றில் மணல் திருடிய கும்பல் கைது செய்யப்பட்டனர்.
  • ஒரு ஜேசிபி, ஒரு மினி லாரி, ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து செய்துள்ளனர்.

கடலூர்:

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கீழக்கல்பூண்டி கிராமத்தில் உள்ள வெள்ளாற்றில் நேற்று இரவு அனுமதி இன்றி மணல் திருடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் வெள்ளாற்றில் மணல் அள்ளிக் கொண்டிருந்த புதுக்குளம் கிராமத்தை சேர்ந்த முருகானந்தம் (28), புலிக்கரைம்பலூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (29), கீழக்கல் பூண்டி கிராமத்தை சேர்ந்த மணிரத்தினம் (32), கண்டமத்தான் கிராமத்தைச் சேர்ந்த செல்வகுமார் (43) மற்றும் இவர்களுடன்2 சிறுவர்கள் இணைந்து மினி லாரியில் ஜேசிபி உதவியுடன் மணல் அள்ளிக்கொண்டிருந்த போது போலீசார் கையும் களவுவமாக பிடித்தனர். தகவலின் பேரில் இரவு சம்பவ இடத்திற்கு வந்த திட்டக்குடி டிஎஸ்பி காவியா மற்றும் ராமநத்தம் (பொறுப்பு) இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், மற்றும் போலீசார் ராமநத்தம் காவல் நிலையம் அவர்களை அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து ராமநத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு ஜேசிபி, ஒரு மினி லாரி, ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து செய்துள்ளனர்.

Tags:    

Similar News