உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

தேனி அருகே ஆடுகள் திருடிய கும்பல்

Published On 2023-05-03 11:10 IST   |   Update On 2023-05-03 11:10:00 IST
  • சம்பவத்தன்று இங்கிருந்த வெள்ளாடு ஒன்று, செம்மறிஆடு ஒன்று ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

தேனி:

தேனி அருகே கருவேல்நா யக்கன்பட்டியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ். இவர் வடபுதுபட்டி ஜோதிநகர் பகுதியில் ஆட்டு பட்டி அமைத்து ஆடுகள் வளர்த்து வருகிறார். சம்பவத்தன்று இங்கிருந்த வெள்ளாடு ஒன்று, செம்மறிஆடு ஒன்று ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

இது குறித்து தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்துள்ளார். அதில் காசிமாயன், செல்வம், ராஜபாண்டி மற்றும் சிலர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். எஸ்.பி. உத்தரவின்பேரில் அல்லிநகரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News