உள்ளூர் செய்திகள்
மூங்கில் தோட்டத்தில் தீ மளமளவென பரவிய காட்சி.
காடையாம்பட்டி அருகே மூங்கில் தோட்டத்தில் தீ விபத்து
- 3 ஏக்கர் பரப்பளவில் மூங்கில் தோட்டம் உள்ளது.
- யாரோ ஒருவர் தீயை பற்ற வைத்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் தீ மளமளவென பரவி மூங்கிலில் பிடித்தது.
காடையாம்பட்டி:
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே செங்கோடன் (வயது 72) என்பவருக்கு சொந்தமான சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் மூங்கில் தோட்டம் உள்ளது. வறட்சி காலம் என்பதால் மூங்கில் சருகுகள் தோட்டத்தில் நிறைந்துள்ளது. அந்த வழியாக சென்ற நபர் யாரோ ஒருவர் தீயை பற்ற வைத்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் தீ மளமளவென பரவி மூங்கிலில் பிடித்தது. இதையடுத்து தீ கொளுந்து விட்டு எரிந்தது. இதனால் மூங்கில் ேதாட்டம் தீ பிளம்பாக காட்சி அளித்தது.
இது பற்றி தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து மூங்கில் தோட்டத்தில் பிடித்த தீயை பல மணி நேரம் போராடி மற்ற தோட்டங்களுக்கு பரவாமல் தீயை அணைத்தனர்.