உள்ளூர் செய்திகள்

முக்குலத்து புலிகள் கட்சியின் நிறுவன தலைவர் ஆறு.சரவணத்தேவர்.

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்

Published On 2023-10-07 09:05 GMT   |   Update On 2023-10-07 09:05 GMT
  • மொத்தம் 11 கோடி பேரின் விவரங்கள் இந்த கணக்கெடுப்பின் மூலம் திரட்டப்பட்டுள்ளது.
  • இடஒதுக்கீடு வழங்கும் வகையில் மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாகப்பட்டினம்:

முக்குலத்துப் புலிகள் கட்சியின் நிறுவன தலைவர் ஆறு.சரவணத்தேவர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது :-

கடந்த ஆண்டு பீகார் மாநில முதலமைச்சர் நிதீஷ்குமார் , சட்டமன்றம், சட்டமேலவை ஆகியவற்றின் ஒப்புதலோடு ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அந்த மாநிலத்தில் சாதிவாரி கணக்கீடை நடத்த உத்தரவிட்டார்.

மொத்தம் 11 கோடி பேரின் விவரங்கள் இந்த கணக்கெடுப்பின் மூலம் திரட்டப்பட்டுள்ளது.

இதே போல கேரளாவிலும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தப் போவதாக அம்மாநில முதல்வர் பிணராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி பெரும்பான்மைக்கு ஏற்ப விகிதாச்சார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

இதுவே உண்மையான சமூகநீதி என்று முக்குலத்துப்புலிகள் கட்சியின் சார்பில் நீண்ட காலமாக தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறோம்.

பீகாரை முன்மாதிரியாக கொண்டு உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்.

அதேபோல தேசிய அளவிலான கணக்கெடுப்பை நடத்தி அதனடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கும் வகையில் மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News