உள்ளூர் செய்திகள்
கால்வாயில் விழுந்த காளை மாட்டை மீட்ட காட்சி.
ஓசூரில் இன்று காலை ராஜ கால்வாயில் விழுந்த காளை மாடு 2 மணிநேர போராட்டத்திற்கு பிறகு மீட்பு
- இரண்டு மணி நேரம் போராடி காளை மாட்டை மீட்டனர்.
- இது போன்ற சம்பவம் தொடர் கதையாக உள்ளது.
ஒசூர்,
ஒசூர் பஸ் நிலையம் எதிரே உள்ள ராஜ கால்வாயில் இன்று காளை மாடு ஒன்று விழுந்திருப்பதை கண்ட பொதுமக்கள், உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர்.
இதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த நிலை அலுவலர் மாது தலைமையிலான குழுவினர் இரண்டு மணி நேரம் போராடி காளை மாட்டை மீட்டனர்.
இந்த பகுதியில் கொட்டப்படும் குப்பைகளை தின்பதற்காக வரும் கால்நடைகள், தவறி ராஜகால்வாயில் விழுந்து விடுகின்றன. இது போன்ற சம்பவம் தொடர் கதையாக உள்ளது.