உள்ளூர் செய்திகள்
கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த வாலிபர் மயங்கி விழுந்து பலி
- ஆட்டோவில் அருகிலுள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
- புகாரின் பேரில் பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை,
கோவை வேலாண்டிபாளையத்தை சேர்ந்தவர் பேச்சிமுத்து. இவரது மகன் கார்த்திக் (27). இவர் வார விடுமுறையை ஒட்டி நேற்று நண்பர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தார். அப்போது திடீரென கார்த்திக் மயங்கி விழுந்து சரிந்தார். உடனடியாக அவரை ஆட்டோவில் அருகிலுள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த வாலிபர் திடீரென மயங்கி விழுந்து இறந்து போன சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.