உள்ளூர் செய்திகள்

கோத்தகிரியில் 2 குட்டிகளுடன் சாலையில் சுற்றிய கரடி

Published On 2023-06-23 14:27 IST   |   Update On 2023-06-23 14:51:00 IST
  • கரடி நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.
  • கரடி குட்டிகளுடன் இரவு நேரத்திலும் நடமாடுவதாகக் கூறப்படுகிறது.

கோத்தகிரி,

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீபகாலமாக கரடிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகிறது. குறிப்பாக உணவு மற்றும் தண்ணீா் தேடி வனப் பகுதியை விட்டு வெளியேறும் கரடிகள் குடியிருப்புப் பகுதிகளில் சா்வ சாதாரணமாக உலவி வருகின்றன.

இந்த நிலையில் கோத்தகிரியில் இருந்து குன்னூா் செல்லும் சாலையில் கன்னிகாதேவி காலனி பகுதியில் பகல் நேரத்தில் இரண்டு குட்டிகளுடன் கரடி உலவி வந்தது. இதனை அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் கண்டு அச்சமடைந்தனா். சிலா் கைப்பேசியில் அதை படம் எடுத்தனா்.

இந்தக் கரடி குட்டிகளுடன் இரவு நேரத்திலும் அப்பகுதியில் நடமாடுவதாகக் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனா். கரடிகளால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படும் முன் குட்டிகளுடன் திரியும் கரடியைப் பிடித்து அடா்ந்த வனப் பகுதிக்குள் விட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Tags:    

Similar News