உள்ளூர் செய்திகள்

கோவையில் கணவரை தவிக்க விட்டு 50 வயது கள்ளக்காதலனுடன் 26 வயது பெண் ஓட்டம்

Published On 2022-09-20 14:48 IST   |   Update On 2022-09-20 14:48:00 IST
  • இளம்பெண்ணுக்கும் ராஜசேகருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது
  • 5 வயது மகனுடன் கள்ளக்காதனுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.

கோவை,

கோவை துடியலூர் அருகே உள்ள நல்லாம்பாளையத்தை சேர்ந்தவர் 26 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி 5 வயதில் ஒரு மகன் உள்ளார். இளம்பெண்ணின் கணவர் லோடுமேனாக வேலை பார்த்து வந்தார்.

அப்போது அவருடன் வேலை பார்த்த தேனியை சேர்ந்த ராஜசேகர் (வயது 50) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

இவர் அடிக்கடி இளம்பெண்ணின் வீட்டிற்கு வந்து சென்றார். அப்போது இளம்பெண்ணுக்கும் ராஜசேகருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் இளம்பெண் ராஜசேகருடன் ஜாலியாக இருந்து வந்தார்.

இந்த கள்ளக்காதல் விவகாரம் இளம்பெண்ணின் கணவருக்கு தெரிய வரவே அவர் தனது மனைவியை கண்டித்தார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இது குறித்து இளம்பெண் தனது கள்ளக்காதலனிடம் தெரிவித்தார். 2 பேரும் வீட்டை விட்டு ஓட்டம் பிடிப்பது என முடிவு செய்தனர்.

சம்பவத்தன்று வீட்டில் இருந்த இளம்பெண் தனது 5 வயது மகனுடன் கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்தார். வேலைக்கு சென்று வீட்டிற்கு திரும்பிய இளம்பெண்ணின் கணவர் தனது மனைவி மற்றும் மகன் வீட்டில் இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து அவர் துடியலூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 வயது மகனுடன் கள்ளக்காதனுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்ணை தேடி வருகிறார்கள். 

Tags:    

Similar News