உள்ளூர் செய்திகள்

கோவை அருகே 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை

Update: 2022-08-15 09:24 GMT
  • இளம்பெண்ணுக்கும், அவரது கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
  • சிறுமியை 2-வது தந்தையின் நண்பரான ஜீவானந்தம் என்பவர் வீட்டிற்கு வருமாறு அழைத்தார்.

கோவை

கோவை ஆலாந்துறை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 29 வயது இளம்பெண். இவருக்கு திருணமாகி விட்டது. இவருக்கு 10 வயதில் மகளும் உள்ளார்.

இந்த நிலையில் இளம்பெண்ணுக்கும், அவரது கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து இளம்பெண் தனது கணவரை பிரிந்து குழந்தையுடன் தனியாக வசித்தார். பின்னர் 2-வதாக வேறொருவரை திருமணம் செய்து கொண்டார்.

சிறுமி அந்த பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்தார். சம்பவத்தன்று சிறுமி பள்ளிக்கு சென்று விட்டு, வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது சிறுமியை 2-வது தந்தையின் நண்பரான ஜீவானந்தம் என்பவர் வீட்டிற்கு வருமாறு அழைத்தார். தந்தையின் நண்பர் என்பதாலும் சிறுமியும் சென்றார்.

அப்போது அங்கு வைத்து அவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியான சிறுமி, அவரிடம் இருந்து தப்பி நேராக வீட்டிற்கு வந்தார்.

பின்னர் தனக்கு நடந்த சம்பவங்களை தாயிடம் கூறினார். இதனை கேட்டு அதிர்ச்சியான அவர், குழந்தையை நேராக அழைத்து கொண்டு ஆலாந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஜீவானந்தம் ஒரு வருடமாக சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்து. இதையடுத்து போலீசார் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News