உள்ளூர் செய்திகள்

பிளஸ் 2 தேர்வில் 92.71சதவீதம் தேர்ச்சி

Published On 2022-06-20 10:51 GMT   |   Update On 2022-06-20 10:51 GMT
  • சேலம் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 92.71சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.
  • பிளஸ் 2 தேர்வில் 15 ஆயிரத்து 674 மாணவர்களும் 18 ஆயிரத்து 778 மாணவிகளும் என மொத்தம் 34 ஆயிரத்து 452 பேர் தேர்ச்சி பெற்றனர்.

சேலம்:

சேலம் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வு 17500 மாணவர்களும், 19 ஆயிரத்து 661 மாணவிகளும் என மொத்தம் 37, 161 பேர் எழுதினர். இதில் 15 ஆயிரத்து 674 மாணவர்களும் 18 ஆயிரத்து 778 மாணவிகளும் என மொத்தம் 34 ஆயிரத்து 452 பேர் தேர்ச்சி பெற்றனர்.

மாவட்டத்தில் மொத்த சதவீத தேர்ச்சி 92.71 சதவீதம் ஆகும். மாணவர்கள் 89.5 7 சதவீதமும் மாணவிகள் 95.51 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் கொரோனா ஊரடங்கையொட்டி அனைத்து மாணவ, மாணவிகளும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில் 2019ஆம் ஆண்டு சேலம் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 91.52 சதவீதம் தேர்ச்சி பெற்றிருந்தனர்.

தற்போது அதைவிட 1.19 சதவீதம் கூடுதல் தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து மாணவ மாணவிகளின் வெற்றிக்கு உழைத்த ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வி அதிகாரிகள் சுமதி மற்றும் உதயகுமார் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.

Tags:    

Similar News