உள்ளூர் செய்திகள்
ஒரே நாளில் 85 வாகன ஓட்டிகள் மீது வழக்கு
- வாகன ஓட்டிகள் மீது விதி மீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
- போக்குவரத்து விதிகளை கடை பிடித்து வாகனங்களை இயக்க அறிவுறுத்தப்பட்டது.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் ஒரே நாளில் என்பத்தைந்து இரு சக்கர வாகன ஓட்டிகள் மீது விதி மீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவற்றில் மூன்று பேர் அமர்ந்து பயணம் செய்த வழக்கில் பதினைந்து வாகனங்கள் மீதும், செல்போன் பேசியபடி ஒட்டியதாக பத்து வாகனங்கள் மீதும், நோ என்ட்ரி பகுதில் சென்றதாகமுப்பது வாகனங்கள் மீதும், ஹெல்மட் அணியாமல் பயணம் செய்ததாக பத்து வாகனங்கள் மீதும், அதிக வேகத்தில் சென்றதாக ஐந்து வாகனங்கள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
நேற்று ஓசூர் போக்குவரத்து காவல் நிலையத்தில் வழக்கில் சிக்கிய வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் போக்குவரத்து விதிகளை கடை பிடித்து வாகனங்களை இயக்க அறிவுறுத்தப்பட்டது.