உள்ளூர் செய்திகள்

 கடத்த முயன்ற 8 டன் ரேசன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

திட்டக்குடி அருகே வெளி மாவட்டத்திற்கு கடத்த இருந்த 8 டன் ரேசன் அரிசி பறிமுதல்

Published On 2022-10-14 09:24 GMT   |   Update On 2022-10-14 09:24 GMT
  • திட்டக்குடி அருகே வெளி மாவட்டத்திற்கு கடத்த இருந்த 8 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
  • டி.எஸ்.பி., காவியாவுக்கு இரவு 9 மணி அளவில் ரகசிய தகவல் கிடைத்தது.

கடலூர்:

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த கொரக்காவாடி கிராமத்தில் உள்ள ஏரிக்கரை அருகே பரமசிவம் என்பவர் வீட்டு வராண்டாவில் வெளி மாவட்டத்திற்கு கடத்த இருந்த 8 டன் ரேசன் அரிசி 100 கிலோ எடையுள்ள மூட்டைகள் 42, 50 கிலோ எடையுள்ள மூட்டைகள் 55 என தனித்தனியாக அடிக்கி வைக்கப்பட்டு இருப்பதாக திட்டக்குடி டி.எஸ்.பி., காவியாவுக்கு இரவு 9 மணி அளவில் ரகசிய தகவல் கிடைத்து. இது குறித்து அவர் ராமநத்தம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற ராமநத்தம் சப் இன்ஸ்பெக்டர் கோபிநாத் ,சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் மற்றும் போலீசார் அங்கு வீட்டு வராண்டாவில் அடிக்கடி வைத்திருந்த ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர் . வீட்டின் உரிமை யாளர் பரமசிவம் தலைம றைவானதால் இது குறித்து வழக்கு பதிவு செய்து பரமசிவத்தை தேடி வருகின்றனர். பறிமுதல் செய்த அரிசி மூட்டைகளை உணவு பாதுகாப்பு துறை வழங்கல் துறையிடம் ஒப்படைத்தனர்.

Tags:    

Similar News