உள்ளூர் செய்திகள்

சாதனை படைத்ததற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.

75 மாணவ-மாணவிகள் 75 நொடிகளில் 75 தேசியக்கொடி வரைந்து சாதனை

Published On 2022-08-16 09:26 GMT   |   Update On 2022-08-16 09:26 GMT
  • உலக சாதனைக்கான அங்கீகார சான்றிதழ் பள்ளியின் நிறுவனர் சிவசங்கரிடம் ஜாக்கி புக் ஆப் வேல்ட் ரெக்கார்டு நிறுவனத்தினர் வழங்கினர்.
  • சாதனையில் பங்கு பெற்ற மாணவ- மாணவிகள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

சீர்காழி:

சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவிலில் இயங்கி வரும் முத்துராஜம் மெட்ரிக் பள்ளியில் 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பல்வேறு கலை நிகழ்ச்சி கொண்டாட்டங்கள் நடைபெற்றது. தொடர்ந்து, 75வது சுதந்திர தினத்தில், 75 மாணவ, மாணவிகள் 75 தேசியக் கொடிகளை 75 நொடிகளில் வரையும் உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது.

இந்த உலக சாதனையை பதிவு செய்யும் ஜாக்கி புக் ஆப் வேல்ட் ரெக்கார்ட்ஸ் உலக சாதனை நிறுவன நாகை மாவட்ட பொறுப்பாளர் ஹரி உமா மற்றும் ஹரிஹரன் இருவரும் கண்காணித்து புதிய உலக சாதனையாக அறிவித்தனர். அதனை தொடர்ந்து, உலக சாதனைக்கான அங்கீகார சான்றிதழ் பள்ளியின் நிறுவனர் சி.பி.சிவசங்கரிடம் ஜாக்கி புக் ஆப் வேல்ட் ரெக்கார்டு நிறுவனத்தினர் வழங்கினர். சாதனையில் பங்கு பெற்ற மாணவ, மாணவிகள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் பள்ளி முதல்வர் ஜேக்கப்ஞா னசெல்வன், துணை முதல்வர் எஸ்தர் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர், பொதுமக்கள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News