உள்ளூர் செய்திகள்

நீலகிரியில் ஒரே நாளில் கஞ்சா விற்ற 7 பேர் கைது

Published On 2022-12-21 08:48 GMT   |   Update On 2022-12-21 08:48 GMT
  • கோத்தகிரி சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான போலீசார் அந்த பகுதிக்கு சென்று பார்த்தனர்.
  • கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்ததுடன் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோத்தகிரி,

கோத்தகிரி அரவேணு பகுதியில் கஞ்சா விற்பதாக கோத்தகிரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின் அடிப்படையில் கோத்தகிரி சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான போலீசார் அந்த பகுதிக்கு சென்று பார்த்தனர். அப்போது அரவேனு ஜீப் ஸ்டேண்டு அருகில் இளைஞர் ஒருவர் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்தார். போலீசார் அந்த இளைஞரை பிடித்து விசாரித்தபோது அவர் வாட்டர்பால்ஸ் பகுதியை சேர்ந்த செல்வா(22)என்பதும், அப்பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்வதற்காக வைத்திருந்ததும் தெரிய வந்தது. உடனடியாக போலீசார் அவரிடமிருந்த கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்ததுடன் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தேவாலா இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமையிலான போலீசார் நாடுகாணியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த வாலிபர்களை பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவர்களிடம் 1 கிலோ 100 கிராம் கஞ்சா இருந்தது. விசாரணையில் அவர்கள் கீழ்நாடுகாணியை சேர்ந்த கலைவாணன், தேவலா வாழவயல் மணிராஜ் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.

கூடலூர் போலீசார் கூடலூரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அங்குள்ள ஆஸ்பத்திரி பின்புறம் வாலிபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்தார்.

அவரை பிடித்து போலீசார் விசாரித்த போது அவர் கூடலூர் கோத்தர் வயலை சேர்ந்த நிஷான் என்பதும் கஞ்சா விற்க அங்கு நின்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து, அவரிடம் இருந்த 20 கிராம் எடை கொண்ட கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் கூடலூர் பழைய கல்குவாரியில் போதைபொருளுடன் நின்ற பாடந்துரையை சேர்ந்த சத்யா என்பவரையும் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 3 கிராம் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.இதேபோல் நிலாக்கோட்டையில் ஷாஜகான் என்ற வாலிபரும், ஊட்டியில் சீனிவாசன் என்பவரும் கஞ்சா விற்றதாக கைது செய்யப்பட்டுள்ளன. ஒரே நாளில் நீலகிரியில் 7 பேர் கஞ்சா விற்றதாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News