உள்ளூர் செய்திகள்

வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட 6 இளைஞர்கள் அதிரடியாக கைது

Published On 2023-06-18 15:00 IST   |   Update On 2023-06-18 15:00:00 IST
  • தொடர்ந்து வழிப்பறி சம்பவங்கள் நடந்து வந்தது.
  • சிறுவன், சுதாகர் (23) உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

சூளகிரி,

கிருஷ்ணகி மாவட்டம், சூளகிரி தாலுகா பேரிகை காவல் நிலையத்திற்கு உள்பட்ட பகுதியில் தொடர்ந்து வழிப்பறி சம்பவங்கள் நடந்து வந்தது. இது ெதாடர்பாக பல்வேறு புகார்கள் வந்தன.

இதையடுத்து பேரிகை போலீசார் நேற்று வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட சூளகிரி அருகே குருபராத்தப்பள்ளியை சேர்ந்த ஆனஸ்ராஜ் (வயது20), ஒசூர் ராம்நகர் சேர்ந்த உமாசங்கர் (21), சூளகிரி பார்த்திபன் (21), சீபம் பகுதியை சேர்ந்த திலிப் (26), 17 வயது சிறுவன், சுதாகர் (23) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் 5 பேர் ஓசூர் சிறையிலும், 17 வயது சிறுவனை சேலம் சீர்திருத்த பள்ளியிலும் சேர்த்தனர்.

Tags:    

Similar News