உள்ளூர் செய்திகள்
பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது
- அங்கு பணம் வைத்து சிலர் சூதாடி கொண்டிருந்தனர்.
- 6 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.30 ஆயிரத்து 650-யையும், சீட்டு கட்டையும் பறிமுதல் செய்தனர்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி போலீசார் கல்லேறி வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பணம் வைத்து சிலர் சூதாடி கொண்டிருந்தனர்.
உடனே போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரித்ததில், கல்கொண்டபள்ளியைச் சேர்ந்த மஞ்சுநாத் (வயது40), பிரகாஷ் (42), எஸ்.குருப்பட்டியைச் சேர்ந்த வெங்கடேஷ், லோகேஷ், சேத்தன்குமார் (26), சத்யராஜ் (26) ஆகிய 6 பேரை சூதாடியது தெரியவந்தது. 6 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.30 ஆயிரத்து 650-யையும், சீட்டு கட்டையும் பறிமுதல் செய்தனர்.