- ஸ்ரீதர் மட்டன் வாங்குவதற்காக கடைக்கு சென்றார். வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளும் காணவில்லை.
- உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் .
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் ஏரியூர் ஒரப்பாச்சியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீதர். இவர் அதே பகுதியில் சிப்ஸ் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி பிரியா (வயது27). இவர்களுக்கு தக்ஷனாஸ்ரீ (11) என்ற மகளும், தமிழரசன் (7) என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் இதனால் பதறிப்போன ஸ்ரீதர் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடிபார்த்தார். எங்கு தேடியும் அவர்கள் கிடைக்காததால், மாயமானது தெரியவந்தது.
இதுகுறித்து ஸ்ரீதர் ஏரியூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான 2 குழந்தைகளையும், பிரியாவையும் தீவிரமாக தேடிவருகின்றனர்.
அதேபோல் தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள நெக்குந்தி கிராமத்தைச் சேர்ந்தவர் சத்யராஜ். இவரது மனைவி சந்தியா (27). இவர்களுக்கு கடந்த 7 வருடங்களுக்கு முன்பு திருமணமானது. இவர்களுக்கு மோகித்குமார் (8) என்ற மகனும், இனியா (6) என்ற மகளும் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று சத்யராஜ் வேலை காராணமாக வீட்டைவிட்டு வெளியே சென்றார். மாலை வீடு திரும்பிவந்து பார்த்தபோது, தனது மனைவி மற்றும் 2 குழந்தைகள் காணவில்லை. இதுகுறித்து சத்யராஜ் பென்னாகரம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் குடும்ப தகராறு காரணமாக வீட்டைவிட்டு வெளியே சென்றதாக தெரிகிறது. 2 குழந்தைகளுடன் மாயமான சந்தியாவை போலீசார் தேடி வருகின்றனர்.