திருட்டு நடைபெற்ற இடத்தில் போலீசார் விசாரணை நடத்திய காட்சி.
வாழப்பாடியில் நகை வியாபாரி பைக்கில் இருந்த ரூ.5.17 லட்சம் கொள்ளை
- பிரபு (வயது 42). மளிகை வியாபாரம் செய்து வரும் இவர், பழைய நகைகளை வாங்கி விற்பனை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
- சாப்பிட்டு விட்டு திரும்பி வந்து பார்த்தபோது, அதில் உள்ள பெட்டியை உடைத்த மர்ம நபர்கள், அதிலிருந்த ரூ.5.17 லட்சம் ரொக்கப்பணத்தை கொள்ளை அடித்துச் சென்றது தெரியவந்தது.
வாழப்பாடி:
வாழப்பாடியை அடுத்த குறிச்சி ஊராட்சி கண்ணுக்காரனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபு (வயது 42). மளிகை வியாபாரம் செய்து வரும் இவர், பழைய நகைகளை வாங்கி விற்பனை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. நேற்று இவர் தனியார் வங்கியில் இருந்து பணத்தை எடுத்து, தனது இருசக்கர வாகனத்திலுள்ள பெட்டியில் வைத்துக் கொண்டு, வாழப்பாடி பேருந்து நிலையம் அருகே ஒரு உணவகத்தில் சாப்பிடு வதற்காக சென்றார்.
தனது இரு சக்கர வாகனத்தை உணவகம் முன்பாக நிறுத்தியிருந்தார். சாப்பிட்டு விட்டு திரும்பி வந்து பார்த்தபோது, அதில் உள்ள பெட்டியை உடைத்த மர்ம நபர்கள், அதிலிருந்த ரூ.5.17 லட்சம் ரொக்கப்பணத்தை கொள்ளை அடித்துச் சென்றது தெரியவந்தது.
இதனால் பதறிப்போன வியாபாரி பிரபு, இதுகுறித்து வாழப்பாடி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார்.
வாழப்பாடி இன்ஸ்பெக்டர் உமாசங்கர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போலீசார் ரூ.5.17 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
வாழப்பாடியில் பட்டப்ப கலில் நகை வியாபாரியின் ரூ 5.17 லட்சம் ரொக்கப்பணம் கொள்ளை போன சம்பவம், இப்பகுதி மக்கள் இடையே பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. பேருந்து நிலையம் அருகிலுள்ள உணவகங்களில், ஓரிரு தினங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என இன்ஸ்பெக்டர் உமா சங்கர் அறிவுறுத்தி உள்ளார்.