காரைக்கால் சாலை விபத்தில் 6 மாத குழந்தை உட்பட 5 பேர் காயம்
- பாலசுப்பிரமணியன் எலக்டிரிக்கல் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார்.
- மோட்டார் சைக்கிள் மோதியதில், 5 பேரும் தூக்கி எறியப்பட்டு காயம் அடைந்தனர்.
புதுச்சேரி:
காரைக்காலை அடுத்த திரு.பட்டினம் அபிராமி தெற்குத் தெருவைச்சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது37). இவர் எலக்டிரிக்கல் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று மாலை, தனது மனைவி கர்பகாம்பாள் (32), 6 மாத கைகுழந்தை மோகனசெல்வராஜனுடன் மோட்டார் சைக்களில் சென்றார். காரைக்கால் அரசு ஆஸ்பத்திரி அருகே சென்றபோது, எதிர் திசையில் நிரவி அக்கரை வட்டத்தைச் சேர்ந்த ஆரோக்கிய விக்னேஸ் (25), அவரது அண்ணன் எபிநேசர் (28) ஆகியோர் வந்த மோட்டார் சைக்கிள் மோதியது.
இதில், 5 பேரும் தூக்கி எறியப்பட்டு காயம் அடைந்தனர். தொடர்ந்து, அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள், அவர்களை மீட்டு காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து, பாலசுப்பிரமணியன் கொடுத்த புகாரின் பேரில், காரைக்கால் நகர போக்குவரத்து போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.