ஒரே நாளில் 42 பேருக்கு கொரோனா தொற்று
- சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஒரே நாளில் 42 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
- கொகோரானா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளில் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 40 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று 42 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 18 பேர், சேலம் ஒன்றியத்தில் 4 பேர், ஓமலூர், சங்ககிரி ஆகிய பகுதிகளில் தலா 3 பேர், தாரமங்கலம், வீரபாண்டி ஆகிய பகுதிகளில் தலா 2 பேர், எடப்பாடி, காடையாம்பட்டி, மேச்சேரி, நங்கவள்ளி, தலைவாசல் ஆகிய பகுதிகளில் தலா ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
மேலும் தர்மபுரி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் இருந்து சேலத்துக்கு வந்த தலா 2 பேர், சென்னையில் இருந்து வந்த ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்கள் உள்பட 246 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 17 பேர் குணமடைந்தனர். அவர்கள் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
மேலும் 246 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொேரானா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளில் முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பொது இடங்களிலும், வாகனங்கள், அலுவலகங்களில் தணிக்கை செய்ய உள்ளாட்சி அமைப்புகள், சுகாதாரத்துறையினர், போலீசார் முடுக்கி விடப்பட்டுள்ளனர். மேலும் அனைவரும் முக கவசம் அணிவித்து சமூக இடை வெளியை கடை பிடித்து கொரோனா பரவலை தடுக்க வேண்டும் என்று அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்த நிலையிலேயே உள்ளது. நேற்று ஒரே நாளில் 19 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது. 13 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 68 ஆயிரத்து 183 ஆகும். இவர்களில் 67 ஆயிரத்து 533 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். 534 பேர் இறந்து விட்ட நிலையில் 116 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சேலம், நாமக்கல் மாவட்டங்களில் நேற்று ஒரே நாளில் 61 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. பொது இடங்களில் முக கவசம் அணிந்து செல்ல பொதுமக்களை மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி நிர்வாகங்கள் அறிவுறுத்தி உள்ளன.