உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

வள்ளியூர் அருகே 4.2 மெகாவாட் காற்றாலை நிறுவிய பாலாஜி நிறுவனத்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து மடல்

Published On 2022-11-23 09:39 GMT   |   Update On 2022-11-23 09:39 GMT
  • நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே வடலி விளையில் பாலாஜி அண்ட் கோ நிறுவனமும், பிரேசில் நிறுவனம் சேர்ந்து ஆசியாவிலேயே அதிக மின் உற்பத்தி திறன் கொண்ட 4.2 மெகாவாட் காற்றாலையை நிறுவியது.
  • இந்திய நாட்டின் வளர்ச்சியை நிலைநாட்டி உள்ளது.

பணகுடி:

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே வடலி விளையில் பாலாஜி அண்ட் கோ நிறுவனமும், பிரேசில் நிறுவனம் சேர்ந்து ஆசியாவிலேயே அதிக மின் உற்பத்தி திறன் கொண்ட 4.2 மெகாவாட் காற்றாலையை நிறுவியது.

இந்த காற்றாலையை ஒரு சில வாரங்களுக்கு முன்பு மத்திய எரிசக்தி மற்றும் ரசாயனத் துறை அமைச்சர் பகவநத் குபா பார்வையிட்டு சென்றார். அதனைத் தொடர்ந்து காற்றாலை மத்திய மின்சார துறை ஆணையக் கூடுதல் செயலாளர் பி.கே.ஆர்யா பார்வையிட்டு ஆய்வுகளை மேற்கொண்டார்.

தற்போது இந்த காற்றாலை நிறுவி சோதனை ஓட்டம் நடைபெற்று வரும் நிலையில் பிரதமர் மோடி, பாலாஜி அன்ட் கோ உரிமையாளரும் பாரதிய ஜனதா மாவட்ட பொருளாளருமான பாலகிருஷ்ணனுக்கு வாழ்த்து மடல் அனுப்பி உள்ளார்.

அதில், தங்களுக்கும் தங்களது நிறுவனத்திற்கும் என்னுடைய இதயம் கனிந்த வணக்கமும் வாழ்த்துக்களும் தங்களது நிறுவனம் நிறுவிய காற்றாலை மூலம் இந்திய நாட்டின் வளர்ச்சியை நிலைநாட்டி உள்ளது.

2047-ம் ஆண்டு நூறாவது சுதந்திர தினம் கொண்டாடுவதற்கு முன் உங்களது நிறுவனமும் வளர்ச்சி செழிப்பு அடைய இறைவனை வணங்குகிறேன் என்று கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News