உள்ளூர் செய்திகள்

கஞ்சா பதுக்கி விற்ற 4 வாலிபர்கள் கைது

Published On 2022-12-16 14:51 IST   |   Update On 2022-12-16 14:51:00 IST
  • 2 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர்.
  • 1.600 கி.கிராம் கஞ்சா, ரூ.23,500 மற்றும் 2 செல்போன்கள் பறிமுதல் செய்தனர்.

கோவை,

கோவை காட்டூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது சாஸ்திரி ரோடு டெக்ஸ்டூல் பாலம் அருகே நின்று கொண்டிருந்த 2 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த கண்ணப்பன் (வயது 47), கணபதி வரதராஜன் நகரை சேர்ந்த சிவக்குமார் (51) என்பது தெரியவந்தது. 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1.600 கி.கிராம் கஞ்சா, ரூ.23,500 மற்றும் 2 செல்போன்கள் பறிமுதல் செய்தனர்.

இதேபோல், பீளமேடு போலீசார் அவிநாசி ரோடு தொட்டிபாளையம் பிரிவு வழியாக ரோந்து சென்றனர் . அப்போது அங்கு கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த தொட்டிபாளையம் பிரிவு ஜெகதீஷ் நகரை சேர்ந்த ரஞ்சித்குமார் (23), நீலாம்பூரை சேர்ந்த கங்குலி(24) ஆகிய இருவரை கைது செய்தனர்.அவர்களிடம் இருந்து 300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் போலீசார் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜபடுத்தப்பட்டு ஜெயிலில் அடைத்தனர். 

Tags:    

Similar News