உள்ளூர் செய்திகள்

கோவையில் காப்பகத்தில் இருந்து குழந்தையுடன் 4 இளம் பெண்கள் தப்பி ஓட்டம்

Published On 2023-02-08 14:54 IST   |   Update On 2023-02-08 14:54:00 IST
  • 2 பேரை மீட்டு போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • எதற்காக காப்பகத்தில் இருந்து ஓட்டம் பிடித்தனர்.

கோவை,

கோவை கணபதி லட்சுமி புரம் பகுதியை சேர்ந்தவர் சிவானந்தம். இவரது மனைவி அம்பிகா (வயது 42).

இவர் கோவை ரத்தினபுரி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

நான் லட்சுமி புரம் பகுதியில் உள்ள

காப்பகத்தில் காவலாளி யாக வேலை செய்து வருகிறேன். சம்பவத்தன்று காப்பகத்தில் இரவு பணியில் ஈடுபட்டு இருந்தேன்.

அப்போது காப்பகத்தில் இருந்த மதுரையை சேர்ந்த 19 வயது பெண், காரமடையை சேர்ந்த 22 வயது பெண், தூத்துக்குடியை சேர்ந்த 37 வயது பெண் மற்றும் 3 வயது குழந்தையுடன் இருந்து வரும் திருப்பூரை சேர்ந்த 26 வயது பெண் ஆகியோர் சேர்ந்து நான் தூங்கி கொண்டு இருந்த போது எனது தலையணையின் அடியில் இருந்த காப்பகத்தின் சாவியை எடுத்து மாயமாகி விட்டனர்.

அவர்களை பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. எனவே அவர்களை மீட்டு தரவேண்டும். இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான 4 பெண்களையும் குழந்தையும் தேடி வந்தனர். அப்போது தூத்துக்குடியை சேர்ந்த 37 வயது பெண் உள்பட 2 பெண்கள் அவர்களது வீட்டு சென்று விட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மற்ற 2 பெண்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 4 இளம் பெண்களும் எதற்காக காப்பகத்தில் இருந்து ஓட்டம் பிடித்தனர். அவர்களுக்கு வேறு ஏதாவது பிரச்சினையா என 2 பேரை மீட்டு போலீசார் பல்வேறு கோணங்களில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News