உள்ளூர் செய்திகள்

முகாமில் பயனாளிகளுக்கு மருத்துவ காப்பீட்டு திட்ட அடையாள அட்டை வழங்கப்பட்டது.

மருத்துவ முகாமில் 4ஆயிரத்து 808 பேர் பயனடைந்தனர்; கலெக்டர் தகவல்

Published On 2023-06-25 09:06 GMT   |   Update On 2023-06-25 09:06 GMT
  • 3 இடங்களில் இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்றது.
  • சித்த மருத்துவம் காசநோய் உள்ளிட்ட அனைத்து நோய்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது.

தஞ்சாவூர்:

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாளை யொட்டி தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் வட்டம் வெண்டை யம்பட்டி ஊராட்சி ராயமுண்டான்பட்டியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் காப்பீட்டுத் திட்ட பயனாளிகள் பதிவு செய்யும் முகாமினை கலெக்டர் தீபக்ஜேக்கப் தலைமையில் துரை சந்திரசேகரன் எம்.எல்.ஏ. முன்னிலையில் தொடங்கி வைத்தார்.

பின்னர் கலெக்டர் தீபக்ஜேக்கப் கூறியதாவது:-

வெண்டையாம்பட்டி ஊராட்சியில் ராயமுன்டான்பட்டி அரசு நடுநிலைப்பள்ளி, கும்பகோணம் தாலுக்கா திப்பிராஜபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் பட்டுக்கோட்டை தாலுக்கா அதிராம்பட்டினம் துர்காசெல்லியம்மன் திருமண மண்டபம் ஆகிய மூன்று இடங்களில் இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்றது. இந்த 3 இடங்களில் நடந்த முகாம்களில் 4808 பேர் பயன்பெற்றனர்.

பொதுவான உடல் பரிசோதனை, பல், காது, மூக்கு, தொண்டை, கண், குழந்தைகள் நலம், பெண்கள் நலம், மகப்பேறு, பொது மருத்துவம், சித்த மருத்துவம் காசநோய் மற்றும் தொழுநோய் உள்ளிட்ட அனைத்து நோய்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

இம்முகாமில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் பாலாஜிநாதன், மருத்துவக் கண்காணிப்பாளர் ராமசாமி , மருத்துவ பணிகள் துணை இயக்குனர் கலைவாணி , மாவட்ட திட்ட அலுவலர் விஜய்ஆனந்த் (முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம்) மற்றும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை, சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News