கோப்பு படம்
அய்யப்ப பக்தர்களிடம் லஞ்சம் பெற்ற இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேர் சஸ்பெண்டு
- வாகனங்களை சோதனை செய்யும் கலால்துறை அலுவலர்கள் லஞ்சம் வாங்குவதாக புகார் வந்தது. இதனைதொடர்ந்து லஞ்சஒழிப்புத்துறை போலீசார் திடீரென சோதனை நடத்தினர்.
- கணக்கில் வராத ரூ.14,120 பணம் கண்டுபிடிக்கப்பட்டு 4 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்..
கூடலூர்:
தமிழக-கேரள எல்லையான குமுளியில் கேரள கலால்துறை சோதனைச்சாவடி உள்ளது. தமிழகத்தில் இருந்து செல்லும் அனைத்து வாகனங்களும் இங்கு சோதனை மேற்கொள்ளப்பட்டு கேரளாவிற்குள் அனுமதிக்கப்படும்.
சபரிமலை சீசன் ெதாடங்கியநிலையில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அய்யப்ப பக்தர்கள் வாகனங்களில் வந்தனர். இங்கு வாகனங்களை சோதனை செய்யும் கலால்துறை அலுவலர்கள் லஞ்சம் வாங்குவதாக புகார் வந்தது. இதனைதொடர்ந்து லஞ்சஒழிப்புத்துறை போலீசார் திடீரென சோதனை நடத்தினர்.
இதில் கணக்கில் வராத ரூ.14,120 பணம் கண்டுபிடிக்கப்பட்டது. அதனை பறிமுதல் செய்து அப்போது பணியில் இருந்த கலால்துறை இன்ஸ்பெக்டர் ஜார்ஜ்ஜோசப், தடுப்புஅலுவலர்கள் ரவி, ரஞ்சித், ஜேம்ஸ்மேத்யூ ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில் கலால்துறை ஆணையர் அவர்கள் 4பேரையும் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார். இதே சோதனைச்சாவடியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அய்யப்ப பக்தர்களிடம் லஞ்சம் வாங்கிய போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேரை லஞ்சஒழிப்பு போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.