விஜயநாராயணம் அருகே சரள் மண் திருடிய 4 பேர் கைது
- இளங்குளம் கிராம நிர்வாக அலுவலர் முத்துசாமி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.
- மண் திருட்டு குறித்து கிராம நிர்வாக அலுவலர் விஜயநாராயணம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
நெல்லை:
விஜயநாராயணம் அருகே இளங்குளம் கிராம நிர்வாக அலுவலர் முத்துசாமி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, ஐ.என்.எஸ். கட்டபொம்மன் பகுதி அருகே வந்து கொண்டிருந்த டிராக்டர்களை நிறுத்தி சோதனை செய்தார்.
அதில் சட்டவிரோதமாக சரள் மண்ணை ஏற்றிவந்தது தெரியவந்தது. உடனடியாக இது தொடர்பாக அவர் விஜயநாராயணம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பன் வழக்குப்பதிவு செய்து மண் திருட்டில் ஈடுபட்ட ஸ்ரீவைகுண்டம் தெற்கு தோழா பண்ணை வடக்கு தெருவை சேர்ந்த ராஜேஷ் கண்ணன் (வயது46), நாசரேத் நோச்சிகுளம் கோகுல் (21), தெற்கு வெங்கடாசலபுரம் வடக்கு தெருவை சேர்ந்த ராஜா (27), வேலாயுதபுரத்தை சேர்ந்த இசக்கிதுரை (20) ஆகிய 4 பேரை கைது செய்தார். மேலும் அவர்களிடமிருந்து 4 ½ யூனிட் சரள் மண் மற்றும் 4 டிராக்டர்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.