உள்ளூர் செய்திகள்

பொள்ளாச்சியில் வாடகைக்கு வாங்கிய காரை விற்று மோசடி-4 பேர் கைது

Published On 2022-11-10 09:25 GMT   |   Update On 2022-11-10 09:25 GMT
  • மதினாபேகம் காரை குறிபிட்ட தொகை வாடகைக்கு விடுமாறு கேட்டுள்ளார்.
  • பொள்ளாச்சி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

பொள்ளாச்சி,

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆ.சங் கம்பாளையம் திரு.வி.க. நகரை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி கனகமணி (வயது 31).

இவர்களிடம் பழனியப்பா வீதியை சேர்ந்த முகமதுபேகம் (33) என்பவர் நண்பராக பழகி வந்தார். அப்போது சரவணம்பட்டியில் உள்ள ஒரு வங்கிக்கு கலெக்சன் செல்வதற்காக அவர்களிடம் இருந்து மதினாபேகம் காரை குறிபிட்ட தொகை வாடகைக்கு விடுமாறு கேட்டுள்ளார்.

இதற்கு கனகமணி சம்மதித்து, மதினாபேகத்திடம் காரை வாடகைக்கு விட்டுள்ளார். அந்த காரை கோவை ஈச்சனாரியை சேர்ந்த பால்ராஜ் (41) என்பவர் பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் 3 மாதங்கள் கடந்தும் வாடகை கொடுக்காததால், சந்தேகமடைந்த கனகமணி. மதினாபேகத்திடம் காரை திருப்பி தரும்படி கேட்டுள்ளார். ஆனால், மதினா பேகமும், பால்ராஜூம் காரை திருப்பி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர்.

இதனால் கனகமணி இதுகுறித்து பொள்ளாச்சி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.விசாரணையில் மதினாபேகமும், பால்ராஜூம் சேர்ந்து, காரை வேறு நபர்களிடம் விற்று பணம் வாங்கியது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார், காரை வாங்கி ஏமாற்றிய மதினா பேகம், பால்ராஜ் மற்றும் காரை விலைக்கு வாங்கிய கோவை ஸ்ரீராம் நகரை சேர்ந்த அமுதன் (45), செல்வபுரத்தை சேர்ந்த அபுதாகீர்(47) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். அவர்களை, பொள்ளாச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News