உள்ளூர் செய்திகள்

நெல்லை மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் மூலம் 3.78 லட்சம் பேர் பயன் பெற்றுள்ளனர்- மாவட்ட மேலாண்மை அதிகாரி தகவல்

Published On 2022-10-14 09:20 GMT   |   Update On 2022-10-14 09:20 GMT
  • நெல்லை மாவட்டத்தில் 22 ஆம்புலன்ஸ்கள் மக்களுக்கு துரித சேவை அளித்து வருகிறது.
  • தற்போது வரை மொத்தம் 3,78,775 பேர் 108 ஆம்புலன்ஸ் மூலமாக பயன்பெற்றுள்ளனர்.

நெல்லை:

108 ஆம்புலன்ஸ் நெல்லை மாவட்ட மேலாண்மை அதிகாரி சோமநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகம் முழுவதும் 1,353 ஆம்புலன்ஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

நெல்லை மாவட்டத்தில் மட்டும் 22 ஆம்புலன்ஸ்கள் பல்வேறு இடங்களில் நிறுத்தப்பட்டு மக்களுக்கு துரித சேவை அளித்து வருகிறது.

நெல்லை மாவட்டத்தில் சேவை தொடங்கப்பட்டது முதல் தற்போது வரை மொத்தம் 3,78,775 பேர் 108 ஆம்புலன்ஸ் மூலமாக அவசர சிகிச்சைக்காக மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டு பயன்பெற்றுள்ளனர். இதில் பிரசவ தேவைக்காக மட்டும் 87,579 பேரும், சாலை விபத்துகளில் 76,652 பேரும் தீ விபத்து, மாரடைப்பு, மூச்சுத்திணறல், கோவிட்-19, பாம்புக்கடி, தற்கொலை முயற்சி போன்ற இதர மருத்துவ அவரச தேவைக்காக 2,14,544 பேரும் 108 ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்தி உள்ளனர்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News