உள்ளூர் செய்திகள்

ேசலத்தில் 36 பேருக்கு ெகாரோனா பாதிப்பு

Update: 2022-08-15 09:23 GMT
  • கொரோனா பாதிப்பு தற்போது குறைய தொடங்கி உள்ளது.
  • தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவரும் அரசு மற்றும் தனியார் மருத்துவ–மனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

சேலம்:

சேலத்தில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு தற்போது குறைய தொடங்கி உள்ளது. அதன்படி நேற்று முன்தினம் சேலம் மாவட்டத்தில் 37 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. நேற்று 36 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சியில் 15 பேரும், சேலம் சுகாதார மாவட்டத்தில் ஓமலூர், வீரபாண்டி, தாரமங்கலம், மேச்சேரி, காடையாம்பட்டி பகுதிகளில் 10 பேரும், ஆத்தூர் சுகாதார மாவட்டத்தில் ஆத்தூர், தலைவாசல், பனமரத்துப்பட்டி, அயோத்தியாப்பட்டணம் பகுதிகளில் 8 பேருக்கும், நகராட்சிகளில் 3 பேருக்கும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவரும் அரசு மற்றும் தனியார் மருத்துவ–மனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Tags:    

Similar News