உள்ளூர் செய்திகள்

நீலகிரியில் முதல்கட்டமாக 3,415 மாணவர்களுக்கு காலை உணவு வழங்க ஏற்பாடு

Published On 2022-09-09 10:23 GMT   |   Update On 2022-09-09 10:23 GMT
  • காலை உணவு திட்டத்தால் 63 அரசு பள்ளி மாணவர்கள் பயன் பெறுவர்
  • காலை உணவு வழங்க அதிகாரிகள் தீவிர ஏற்பாடு

ஊட்டி:

தி.மு.க. தலைமையிலான தமிழக அரசின் ஓராண்டு நிறைவையொட்டி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், அரசுப் பள்ளி மாணவர் களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும் என்ற அறிவிப்பும் வெளி யிடப்பட்டது.

இதில் முதல்கட்டமாக மாநகராட்சி, நகராட்சி மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்படும் என தெரிவித்தார்.

இந்நிலையில், இந்தத் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. வருகிற 15-ம் தேதி முதல் இத்திட்டம் செயல்படுத்தப்பட வுள்ளது.

இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் 63 பள்ளிகளில் பயிலும் 3415 மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இது குறித்து மாவட்ட கலெக்டர் அம்ரித்திடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை குழந்தை களின் கல்வியை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டைப் போக்கும் நோக்கத் திலும், ஊட்டச்சத்து நிலை உயர்த்தவும், ரத்தசோகை குறைபாட்டை நீக்கவும், பள்ளிகளில் குழந்தைகளின் வருகையை அதிகரிக்கவும், பணிக்கு செல்லும் தாய்மார்களின் பணிச்சுமையை குறைக்கும் நோக்கிலும், 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்க ப்படும்.அதனடிப்படையில், முதற்கட்டமாக நீலகிரி மாவட்டம் கூடலூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட 63 பள்ளிகளில் பயிலும் 3415 மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. காலை உணவு தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் இயல்பான நிறம், மணம் உடையதாகவும், வேறு வெளிப்பொருட்கள் கலக்காமலும், சுத்தமானதாகவும் இருக்க வேண்டும். உணவு சமைக்க பயன்படுத்தப்படும் சமையல் பொருட்கள் தரமானதாகவும் , சுத்தமா னதாகவும் இருக்க வேண்டும். காய்கறிகள் தரத்தை உறுதி செய்வதுடன் அவற்றை சமைப்பதற்கு முன் தண்ணீரில் நன்கு கழுவி பயன் படுத்த வேண்டும். தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பள்ளிகளில் சுகாதார மாகவும், தரமானதாகவும் அட்ட வணைப்படி உணவு தயாரித்து குழந்தைகளுக்கு வழங்க வேண்டும்.தினசரி உணவு இருப்புகளின் பதிவேடுகள் பராமரிக்கப்பட வேண்டும் என சுய உதவிக்குழுஉறுப்பினர் களுக்கு அறிவுறு த்தப்பட்டுள்ளது.உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் அவ்வப்போது பள்ளிகளை ஆய்வு செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு உணவு வழங்கும் முன்பு பள்ளி மேலாண்மை குழு ஒவ்வொரு நாளும் உணவின் தரத்தை உறுதி செய்யும் வகையில் உணவை பரிசோதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News