உள்ளூர் செய்திகள்

நீலகிரியில் 30 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

Published On 2023-01-02 08:49 GMT   |   Update On 2023-01-02 08:49 GMT
  • 19 வகையான ‘பிளாஸ்டிக்’ பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • பிளாஸ்டிக் பொருட்களை கண்காணித்து பறிமுதல் செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது.

ஊட்டி,

நீலகிரியின் சுற்றுச்சூ ழலை பாதுகாக்கும் வகையில் பிளாஸ்டிக் பைகள், கப், டம்ளர், கரண்டி, முலாம் பூசப்பட்ட காகித தட்டு உள்ளிட்ட 19 வகையான 'பிளாஸ்டிக்' பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தவிர, குடிநீர் பாட்டில், குளிர்பான பாட்டில்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

விதிமீறி பயன்படுத்து பவர்கள் அல்லது வெளியிடங்களில் இருந்து பயணிகளால் கொண்டு வரப்படும், தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கண்காணித்து பறிமுதல் செய்ய மாவட்ட நிர்வாகம் சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் தற்போது நீலகிரிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது. இதை தொடர்ந்து நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சிகள் எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில், சுற்றுலா வாகனங்களை தீவிரமாக கண்காணிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.

கடந்த 4 நாட்களாக நகராட்சி பகுதிகளில் சுகாதார அலுவலர்கள், பேரூராட்சி, கிராம ஊராட்சி பகுதிகளில் செயல் அலுவலர்கள்,வருவாய் துறையினர் இணைந்து சோதனை மேற்கொ ண்டனர். அதில் 30 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல் செய்த னர். ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்ததுடன் 20 கடைகளுக்கு 'சீல்' வைக்கப்பட்டது. 

Tags:    

Similar News