உள்ளூர் செய்திகள்

ஓட்டலில் உணவு பாதுகாப்பு அதிகாரி சோதனை செய்த போது எடுத்தபடம்.

காரிமங்கலத்தில் பேக்கரி உள்பட 3 கடைகளுக்கு அபராதம் விதிப்பு

Published On 2023-05-31 09:46 GMT   |   Update On 2023-05-31 09:46 GMT
  • ஹோட்டல்கள் தாபாக்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு தடை செய்யப்பட்ட ரசாயன பொருட்கள் பயன்படுத்துதல் கண்டறியப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டது.
  • சம்பந்தப்பட்ட ஓட்டல்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது.

காரிமங்கலம்,

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் காலாவதியான தண்ணீர் பாட்டில்கள் மற்றும் குளிர்பானங்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரின் பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் டாக்டர் பானு சுஜாதா மேற்பார்வையில் பாலக்கோடு காரிமங்கலம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் மற்றும் உணவு பாதுகாப்பு துறை பணியாளர்கள் காரிமங்கலம், மாட்லாம்பட்டி, பெரியாம்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள குளிர்பான கடைகள், மளிகை கடைகள் ஆகியவற்றில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது மாட்லாம்பட்டி பகுதியில் உள்ள பேக்கரியில் காலாவதியான தண்ணீர் பாட்டில்கள் மற்றும் தேதி குறிப்பிடப்படாத தண்ணீர் கேன்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் இது தொடர்பாக இரண்டு கடைகளுக்கு தலா 1000 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. இதே போல் ஹோட்டல்கள் தாபாக்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு தடை செய்யப்பட்ட ரசாயன பொருட்கள் பயன்படுத்துதல் கண்டறியப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட ஓட்டல்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும் அகரம் பிரிவு சாலையில் செயல்படும் மாங்காய் மண்டிகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டு அழுகக்கூடிய நிலையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

காரிமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உணவு பாதுகாப்பு உரிமம் பெற்று வணிகம் மேற்கொள்ள வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

Tags:    

Similar News