உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

பெரியகுளம் அருகே சிலைகள் கடத்திய சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது

Published On 2023-08-23 05:52 GMT   |   Update On 2023-08-23 05:52 GMT
  • தாமரைக்குளம் பகுதியில் ஒருவீட்டில் பணம் மற்றும் பழமையான முருகன், வள்ளி-தெய்வானை சிலைகளை திருடிச்சென்றனர்.
  • கொள்ளை நடந்த வீடுகளில் கைரேகை மற்றும் தடயங்களை கொண்டு ஆய்வு செய்தனர்.

பெரியகுளம்:

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டியை சேர்ந்தவர் சரவணன். இவரது வீட்டில் புகுந்த திருட்டுகும்பல் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றது. இதனைதொடர்ந்து தாமரைக்குளம் பகுதியில் பழனிவேல் என்பவரது வீட்டில் பணம் மற்றும் பழமையான முருகன், வள்ளி-தெய்வானை சிலைகளை திருடிச்சென்றனர்.

இதுகுறித்து தென்கரை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் தனிப்படை அமைத்து கைவரிசை காட்டிய கும்பலை தீவிரமாக தேடி வந்தனர். கொள்ளை நடந்த வீடுகளில் கைரேகை மற்றும் தடயங்களை கொண்டு ஆய்வு செய்தனர். மேலும் தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வழிப்பறி மற்றும் கொள்ளை சம்பவங்களில் தொடர்புடைய 5 நபர்களின் விபரங்களை சேகரித்த போது அவர்கள் வீடுகளில் கொள்ளையடித்தது தெரியவந்தது.

இதனைதொடர்ந்து 2 சிறுவர்கள் மற்றும் மதுசூதனன்(22) ஆகிய 3 பேரை கைது செய்தனர். இதில் மதுசூதனன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 2 சிறுவர்களையும் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர். அவர்களிடமிருந்து சிலைகள் மீட்கப்பட்டன. இந்த வழக்கு தொடர்பாக மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். மீட்கப்பட்ட சிலைகள் கோவில்களிலிருந்து கொள்ளையடிக்கப்பட்டதா என உண்மை தன்னை அறிய ஆய்வுக்கு அனுப்பப்பட்டு அதன்பின்னரே உரிமையாளரிடம் ஒப்படைக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News