உள்ளூர் செய்திகள்
மாடு திருடி கைதான 3 பேரையும் படத்தில் காணலாம்.
உளுந்தூர்பேட்டை அருகே மாடு திருடிய பெண் உள்பட 3 பேர் கைது
- உளுந்தூர்பேட்டை அருகே மாடு திருடிய பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
- மேய்ச்சலுக்கு அழைத்து சென்று விட்டு வீட்டில் கட்டி வைப்பார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டை அருகே உள்ள ஆசனூரை சேர்ந்தவர் விஜய். விவசாயி. இவருக்கு சொந்தமாக மாடுகள் உள்ளது.அதனை மேய்ச்சலுக்கு அழைத்து சென்று விட்டு வீட்டில் கட்டி வைப்பார். அதன்படி பசுமாடு ஒன்றை கட்டி வைத்து இருந்தார். அதனை அதெ பகுதியை சேர்ந்த பூமாலை (72), மடப்பட்டு நாகவள்ளி (47) செம்பானந்தல் அல்லி முத்து (57) ஆகியோர் திருடி சென்றனர்.இதனை பார்த்த பொதுமக்கள் அவர்களை பிடித்து எைடக்கல் போலீசில் ஒப்படைத்தனர். சப்-இன்ஸ்பெக்டர் சேட்டு வழக்கு பதிவு செய்து அவர்கள் 3 பேரையும் கைது செய்தார். பின்னர் அவர்கள் உளுந்தூர் பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.