உள்ளூர் செய்திகள்

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது

Published On 2022-12-18 08:41 GMT   |   Update On 2022-12-18 08:41 GMT
  • 5 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.
  • 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

அன்னூர்,

கோவை மாவட்டம் அன்னூரை அடுத்துள்ள கணேசபுரம், தெலுங்கு பாளையம் பகுதிகளில் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக அன்னூர் இன்ஸ்பெக்டர் நித்யாவிற்கு ரகசிய தகவல் வந்தது.

தகவலின் பேரில் எஸ்ஐக்கள் ஆனந்த குமார்,செல்வராஜ் உள்ளிட்டோர் தலைமை யிலான போலீசார் அப்பகுதிகளில் செயல்பட்டு வரும் மளிகை மற்றும் பெட்டிக்கடைகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது,கணேசபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் காட்டம்பட்டியை சேர்ந்த செல்லத்துரை(41) என்பவரது மளிகை கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சட்ட விரோதமாக பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 5 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

மேலும்,தெலுங்கு பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சுப்ரத்குமார் ஸ்வைன்(35),சத்யபிராத் ஸ்வைன்(30) உள்ளிட்டோரின் பெட்டிக்க டைகளை சோதனை மேற்கொண்டதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.இதனை யடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 5 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

பின்னர், 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News