உள்ளூர் செய்திகள்

மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள்.

வேலை வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபட்ட 3 பேர் கைது

Published On 2023-11-21 09:54 GMT   |   Update On 2023-11-21 09:54 GMT
  • 15-க்கும் மேற்பட்டவர்களிடம் சுமார் ரூ.50 லட்சம் வரை பெற்றுள்ளனர்.
  • பணத்தை திருப்பி தராமல் மக்களை ஏமாற்றி வந்துள்ளனர்.

நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம் மாவட்டம் பால்பண்ணைச்சேரி ஆட்டோ சிட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (வயது 33).

திருச்சியை சேர்ந்த ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் நாராயணசாமி மற்றும் அவரது மருமகன் தனபால் ஆகியோர் சேர்ந்து ஓஎன்ஜிசியில் வேலை வாங்கித் தருவதாக கூறி வலிவலம், வேதாரண்யம் மருதூர், குருக்கத்தி, கீழ்வேளூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 15-க்கும் மேற்பட்டவர்களிடம் சுமார் ரூ. 50 லட்சம் வரை பெற்றுள்ளனர்.

ஆனால் யாருக்கும் வேலை வாங்கி தரவில்லை.

மேலும் பணத்தையும் திருப்பி தராமல் ஏமாற்றி வந்துள்ளனர்.

இதனால் பாதிக்கப்பட்ட வர்கள் நாகப்பட்டினம் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு அலுவலகத்தில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்தனர்.

இது குறித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்சிங் உத்தர விட்டார்.

இதைத் தொடர்ந்து போலீஸ் துணை சூப்பிரண்டு பழனிச்சாமி அறிவுருத்தலின் பேரில், மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பிராங்கிளின் உட்ரோ வில்சன் குற்றவா ளிகள் ராஜலட்சுமி, நாராயணசாமி தனபால் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து நாகப்பட்டினம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

நாகை அருகே ஓஎன்ஜிசியில் வேலை வாங்கித் தருவதாக கூறி இளம் பெண் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News