உள்ளூர் செய்திகள்

பேட்டையில் நள்ளிரவில் 3 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு

Published On 2023-04-16 14:42 IST   |   Update On 2023-04-16 14:42:00 IST
  • நேற்று இரவு மோட்டார் சைக்கிள்களை வீட்டில் நிறுத்திவிட்டு தூங்க சென்றனர்.
  • திருட்டு குறித்து பேட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

நெல்லை:

நெல்லை பேட்டை நரிக்குறவர் காலனியை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 22). அதே பகுதியில் வசித்து வருபவர் விக்ரம்(37). இவர்கள் 2 பேரும் தங்களது 3 மோட்டார் சைக்கிள்களையும் வீட்டின் முன்பு நிறுத்துவது வழக்கம்.

நேற்று இரவும் வழக்கம்போல் மோட்டார் சைக்கிள்களை வீட்டில் நிறுத்திவிட்டு தூங்க சென்றுவிட்டனர். இன்று அதிகாலை எழுந்து பார்த்தபோது அவர்களது 3 மோட்டார் சைக்கிள்களையும் காணவில்லை. மர்ம நபர்கள் திருடிச்சென்றிருப்பதை அறிந்த அவர்கள் பேட்டை போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News