அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்த தி.மு.க.வினர்.
உடன்குடி பகுதியில் 3 அங்கன்வாடி கட்டிடங்கள் உடனடியாக புதுப்பிக்கப்படும் -அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தகவல்
- 3 அங்கன்வாடி கட்டிடங்கள் மிகவும் பழுதுஏற்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளதாக மனுவில் கூறியிருந்தனர்.
- இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறினார்
உடன்குடி:
உடன்குடி அருகே உள்ள தண்டுபத்தில் தமிழக மீன்வளம் மற்றும் மீனவர் நலன், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை தி.மு.க. நிர்வாகிகள் சந்தித்தனர்.
அப்போது, உடன்குடி பேரூராட்சி மன்ற தலைவர் ஹுமைரா அஸ்ஸாப் கல்லாசியின் கோரிக்கை மனுவை தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் இளங்கோ முன்னிலையில், உடன்குடி கூட்டுறவு சங்க தலைவர் மற்றும் 13- வது வார்டு கவுன்சிலர் அஸ்ஸாப் கல்லாசி, மனிதநேய மக்கள் கட்சியின் 16-வது வார்டு கவுன்சிலர் முகம்மதுஆபித், 2-வது வார்டு கவுன்சிலர் பாலாஜி, மருதூர்கரை கவுன்சிலர் முத்துராமலிங்கம் மாவட்ட பிரதிநிதி , ஜெயபிரகாஷ், தி.மு.க. 16-வது வார்டு செயலாளர் சுபியான் மற்றும் தமீம் ஆகியோர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
உடன்குடி தேர்வுநிலை பேரூராட்சிக்குட்பட்ட புதுமனை மேலத்தெரு, வைத்திலிங்கபுரம் மாரியம்மன் கோவில் தெரு ஆகிய இடங்களில் அமைந்துள்ள 3 அங்கன்வாடி கட்டிடங்கள் மிகவும் பழுதுஏற்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளது.
விரைவில் 3 கட்டிடங் களையும் புதுப்பித்து கட்ட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. மேலும் மனுவை அமைச்சரிடம் கொடுத்து கோரிக்கையை நிறைவேற்ற வற்புறுத்தினர்.
மனுவைபெற்றுக் கொண்ட அமைச்சர் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று உறுதி கூறினார்.