சேலம் கோட்டை பகுதியில் உள்ள தொடக்கப் பள்ளியில் புத்தகங்கள் வாங்கிய மகிழ்ச்சியில் மாணவ, மாணவிகள்.
அரசு பள்ளி குழந்தைகளுக்கு 2-ம் கால பருவ புத்தகங்கள்
- 2000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப்பள்ளிகள்
- விடுமுறை முடிவடைந்து இன்று பள்ளிகளுக்கு உற்சாகமாக திரும்பினர்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் சுமார் 2000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப்பள்ளிகள், அரசு உதவிப்பெறும் பள்ளி கள், தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான அரசு தொடக்கப்பள்ளி குழந்தைகள் காலாண்டு விடுமுறை முடிவடைந்து இன்று பள்ளிகளுக்கு உற்சாகமாக திரும்பினர்.
இக்குழந்தைகளை தலைமை ஆசிரியர்கள், ஆசிரியைகள் உற்சாகமாக வரவேற்றனர். காலாண்டு தேர்வு முடிடைந்ததை அடுத்து இன்று இக்கு ழந்தைகளுக்கு 2-ம் கால பருவத்திற்கான பாட புத்தகங்கள் வழங்கப்பட்டன. தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாட புத்தகங்கள் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பள்ளி குழந்தைகளுக்கு தலைமை ஆசிரியர்கள் வழங்கினார்கள். குழந்தை கள் ஆர்வத்துடன் இப்புத்தகங்களை வாங்கி மகிழ்ச்சியுடன் திறந்து பார்த்தனர்.
தமிழ் வழி, ஆங்கிலம் வழி (மெட்ரிக்) ஆகிய பயிற்று மொழிகளில் கல்வி கற்று கொடுக்கப்படுகிறது. அதன்படி பாட புத்தகங்கள் தனித்தனியாக தமிழ் பிரிவு, ஆங்கில பிரிவு மாணவ- மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. இதேபோல் அரசு உதவிப் பெறும் பள்ளிகளிலும் பாட புத்தகங்கள் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டன.