உள்ளூர் செய்திகள்

2-ம் கட்ட ேஜ.இ.இ. நுழைவு தேர்வு

Update: 2022-07-02 12:09 GMT
  • 2-ம் கட்ட ேஜ.இ.இ. நுழைவு தேர்வு விண்ணப்பப்படிவத்தை திருத்தம் செய்ய மாணவர்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு வழங்கி உள்ளது.
  • முதற்கட்டமான பகுதி-1 ேஜ.இ.இ. நுழைவு தேர்வு ஏற்கனவே நடைபெற்று விட்டது.

சேலம்:

இந்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில், என்ஜினீயரிங் படிப்பில் சேர்வதற்கான, ஜே.இ.இ. நுழைவுத் தேர்வு பகுதி 1, பகுதி 2 என 2 கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதற்கட்டமான பகுதி 1 ேஜ.இ.இ. நுழைவு தேர்வு ஏற்கனவே நடைபெற்று விட்டது.

இதையடுத்து பகுதி 2 ேஜ.இ.இ. நுழைவு தேர்வு (முதன்மை) 2022 நடத்துவதற்கான ஏற்பாடுகள் மத்திய கல்வி அமைச்சகத்தின் தேசிய தேர்வு முகமை சார்பில் மும்முரமாக செய்யப்பட்டு வருகிறது. இந்த தேர்வுக்கு சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கரூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் வசிக்கும் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகள் ஏராளமானோர் விண்ணப்பித்துள்ளனர்.

இந்த நிலையில் பகுதி 2 ேஜ.இ.இ. நுழைவு தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பப்படிவத்தில் திருத்த செய்ய வேண்டி மாணவ மாணவிகள் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை தேசிய தேர்வு முகமை ஏற்று அவர்களில் நலன் கருதி மேலும் ஒரு வாய்ப்பு வழங்கி உள்ளது.

அதன்படி விண்ணப்ப தாரர்கள் தங்கள் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தில் உள்ள விவரங்களில் திருத்தம் செய்ய நாளை (3 ந்தேதி) இரவு 11.50 மணி வரை கால அவகாசம் வழங்கி உள்ளது.

விண்ணப்பப் படிவத்தில் மாணவ மாணவிகள் கவனமாக திருத்தம் செய்து பயனடையுமாறு என்.டி.ஏ. கேட்டுக்கொண்டுள்ளது. அதன்பிறகு, விவரங்களில் எந்தத் திருத்தமும் செய்ய வாய்ப்பு வழங்கப்படாது என என்.டி.ஏ. தெரிவித்துள்ளது. 

Tags:    

Similar News