உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

திண்டுக்கல் மாவட்டத்தில் 2988 பேர் நீட் தேர்வு எழுத அனுமதி

Published On 2023-05-06 06:30 GMT   |   Update On 2023-05-06 06:30 GMT
  • திண்டுக்கல் மாவட்டத்தில் 5 மையங்களில் இந்த தேர்வு நடைபெற உள்ளது.
  • மொத்தம் 2988 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல்:

நாடு முழுவதும் மருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்வு (நீட்) நாளை நடைபெறுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் 5 மையங்களில் இந்த தேர்வு நடைபெற உள்ளது.

பார்வதீஸ் கல்லூரியில் 936, என்.பி.ஆர். பாலிடெக்னிக் கல்லூரியில் 840, என்.பி.ஆர். கலைக்கல்லூரியில் 696, அனுகிரகா பள்ளியில் 168, பிரசித்தி வித்யாலயா பள்ளியில் 348 பேர் என மொத்தம் 2988 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் தேசிய தேர்வு முகமையால் அறிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டுதலின்படி தங்களது ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து அதனை தங்கள் தேர்வு எழுதும் மையத்துக்கு கொண்டு வர வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

அனுமதி இல்லாத பொருட்களை தேர்வு மையத்துக்குள் கொண்டு வரக்கூடாது எனவும், தேர்வு நடப்பதற்கு 1 மணி நேரத்துக்கு முன்பாகவே வளாகத்திற்குள் வந்து விட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News