உள்ளூர் செய்திகள்
பூக்குழி இறங்கிய பக்தர் ஒருவரை படத்தில் காணலாம்.

கடையநல்லூர் அருகே கோவில் கொடை விழாவில் பூக்குழி இறங்குதல்

Published On 2022-06-04 14:58 IST   |   Update On 2022-06-04 14:58:00 IST
கடையநல்லூர் கிருஷ்ணாபுரத்தில் பிரசித்திபெற்ற குறுக்கிட்டான் கருப்பசுவாமி கோவில் கொடை விழாவில் பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
கடையநல்லூர்:

கடையநல்லூர் கிருஷ்ணாபுரத்தில் பிரசித்திபெற்ற குறுக்கிட்டான் கருப்பசுவாமி கோவில் கொடைவிழா கடந்த 27-ந் தேதி கால்நாட்டு விழாவுடன் தொடங்கியது. 

தொடர்ந்து முதல்நாளான நேற்று முன்தினம் காலை   கணபதிஹோமம், வருஷாபிஷேகம் நடந்தது. மாலை  குடியழைப்பு, ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து தீர்த்தம் எடுத்து வருதல்,  அபிஷேகம், சிறப்பு தீபாராதனை, வில்லிசை, நள்ளிரவு பூஜை நடந்தது. 

தொடர்ந்து 2-ம் நாளான நேற்று காலை  பெரியநாயகம் கோவில் மற்றும் குற்றாலம் தீர்த்தம் எடுத்து வர புறப்படுதல், மாலை 3மணிக்கு வாணவேடிக்கை முழங்க முளைப்பாரி, பால்குடம் ரதவீதி ஊர்வலம் நடந்தது. மாலையில் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. விரதம் மேற்கொண்டிருந்த பக்தர்கள் பூக்குழிஇறங்கினர். இரவு  12மணிக்கு நள்ளிரவு பூஜை நடந்தது. 

தொடர்ந்து இன்று  4-ம் தேதிகாலை 7மணிக்கு முளைப்பாரி கரைத்தல், 11 மணிக்கு சிறப்பு அன்னதானம் நடக்கிறது. விழாவில் கிருஷ்ணாபுரம், கடையநல்லூர்,  மேலக்கடையநல்லூர்,  புளியங்குடி, செங்கோட்டை, தென்காசி, சங்கரன்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News