உள்ளூர் செய்திகள்
ரெயில் மோதி பலியான மான்.

ரெயில்மோதி புள்ளிமான் சாவு

Published On 2022-06-04 12:43 IST   |   Update On 2022-06-04 12:43:00 IST
திருமங்கலம் அருகே ரெயில் மோதி புள்ளிமான் பரிதாபமாக இறந்தது.
திருமங்கலம்

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடி தாலுகா சிவரக்கோட்டை பகுதியில் இன்று அதிகாலை இரை தேடிச்சென்ற 5 வயது ஆண் புள்ளிமான் அப்பகுதியில்  இருந்த ெரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது சென்னையிலிருந்து விருதுநகர் நோக்கிச் சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில்  மோதியதில் ஆண் புள்ளிமான் உடல் சிதைந்து சம்பவ இடத்திலேயே பலியானது. 

மான் இறந்ததைக் கண்ட ரெயில்வே ஊழியர்கள்  வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் உசிலம்பட்டி வனச்சரக அதிகாரிகள் இறந்த மானின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு பின் அதே பகுதியில் புதைத்து சென்றனர்.
தண்டவாளத்தை கடக்க முயன்ற 5 வயது ஆண் புள்ளிமான் ரெயில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.

 தொடர்ந்து இப்பகுதியில் அதிகப்படியான மான்கள் உயிரிழக்கும் சூழல் நிலவுவதால் வனச் சரணாலயம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News