உள்ளூர் செய்திகள்
தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தலைமையில் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

தூய்மை இயக்க விழிப்புணர்வு பேரணி

Published On 2022-06-04 06:18 GMT   |   Update On 2022-06-04 06:18 GMT
ராஜபாளையத்தில் தூய்மை இயக்க விழிப்புணர்வு பேரணியை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
ராஜபாளையம்,

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூய்மை நகரம் மற்றும்பேரூராட்சிக்கான மக்கள் இயக்கம் சார்பில் நாம் இருக்கும் இடத்தை தூய்மையான பகுதியாக மாற்ற குப்பைகளை மக்கும் குப்பை, மட்காத குப்பை, என பிரித்து வழங்க வேண்டி ராஜபாளையம் பஸ் நிலையத்தில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. 

இதை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. கொடியசைத்தும், சாலையை தூய்மைப்படுத்தியும் தொடங்கி வைத்தார்.

அதேபோல் செட்டி யார்பட்டி பேரூராட்சியில் பாலித்தின் பயன்பாட்டை தவிர்த்து விட்டு மஞ்சள் பையை மக்கள் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக  அங்குள்ள காய்கறி மார்க்கெட்டுக்கு  சென்று மஞ்சள் பை வழங்கினார். 

விழாவில் பேசிய  அவர், இந்தியாவிலேயே முதல் தூய்மையான மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றுகிறவர்   முதல்வர் மு.க.ஸ்டாலின் தான்.அ வர் வழியில் என்றும் நடப்போம். நாம் இருக்கும் இடத்தை தூய்மையான இடமாக மாற்ற அனைவரும் உறுதி ஏற்போம் என்றார்.

விழாவில் தி.மு.க. நகர செயலாளர் ராம மூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர்கள் ஷியாம் ராஜா, கனகராஜ், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வேல்முருகன், நகராட்சி துணை சேர்மன் கல்பனா குழந்தை வேலு, செட்டி யார்பட்டி சேர்மன் ஜெயமுருகன், துணை சேர்மன் விநாயகமூர்த்தி,  செட்டியார்பட்டி நகர செயலாளர் இளங்கோவன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News