உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்.

5 வயது மகளுடன் டிரைவர் மாயம்

Published On 2022-06-03 15:23 IST   |   Update On 2022-06-03 15:23:00 IST
தஞ்சையில் 5 வயது மகளுடன் டிரைவர் மாயமடைந்ததை அடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தஞ்சாவூர்:

தஞ்சை மருத்துவக்க ல்லூரி சாலை ஸ்ரீநகர் பகுதியை சேர்ந்தவர் கோடீஸ்வரன்(வயது 40). டிரைவர். இவருடைய மனைவி இலக்கியா. இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. 5 வயதில் கார்த்திகா என்ற பெண் குழந்தை உள்ளது. 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இலக்கியா தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மனைவி இறந்ததால் கடந்த சில மாதங்களாக கோடீஸ்வரன் மனவேதனையில் இருந்து வந்துள்ளார். இந்தநிலையில் சம்பவத்தன்று கோடீ ஸ்வரன், மகளுடன் வெளியில் சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. 

இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவா்களை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து கோடீஸ்வரனின் தந்தை பழனிசாமி, தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து கோடீஸ்வரன் எங்கு சென்றார்?, என்ன ஆனார்?, அவர்களை யாரேனும் கடத்தி சென்றனரா? என்பன உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News