உள்ளூர் செய்திகள்
கடைகளில் சரக்கு இறக்கும் வாகனங்களால் போக்குவரத்து பாதித்துள்ளதை படத்தில் காணலாம்.

குமாரபாளையத்தில் கடைகளில் சரக்கு இறக்கும் வாகனங்களால் போக்குவரத்து இடையூறு

Published On 2022-06-03 14:16 IST   |   Update On 2022-06-03 14:16:00 IST
குமாரபாளையத்தில் கடைகளில் சரக்கு இறக்கும் வாகனங்களால் போக்குவரத்து பாதிப்படைந்தது.
குமாரபாளையம்:

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சேலம் சாலையில் உள்ள கடைகளுக்கு தினமும் சரக்குகள் கொண்டு வரும் வாகனங்கள் சாலையோரம் நிறுத்தி வைக்கப்படுகிறது. 

இதனால் வாகன போக்குவரத்திற்கு பெரும் இடையூறாக உள்ளது. சில சமயங்களில் கடைகளில் பொருட்கள் இறக்கும் வரை பல வாகனங்கள் காத்திருக்கும் நிலையும் ஏற்படுகிறது. 

இது போன்ற வாகனங்கள் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் வந்து சரக்குகள் இறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகராட்சி அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News