உள்ளூர் செய்திகள்
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி கைது
திருப்பரங்குன்றத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
மதுரை
மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள திருநகர் நெல்லையப்ப புரத்தை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (வயது 45), கூலித்தொழிலாளி. இவர் வீட்டின் அருகே வசிக்கும் சிறுமிக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து அந்த சிறுமி தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார் ஜெயபிரகாசுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது ஜெயபிரகாஷ் மற்றும் அவரது மனைவி கலையரசி ஆகியோர் அவதூறாக திட்டியதாக தெரிகிறது.
இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமமாலா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
இதில் ஜெயபிரகாஷ் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் போலீ சார் கைது செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.