உள்ளூர் செய்திகள்
வங்கி ஊழியர் விஷம் குடித்து தற்கொலை
வங்கி ஊழியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை
விருதுநகர் மாவட்டம் நல்லாம்பட்டி கந்தன் தெருவைச் சேர்ந்தவர் அருண் (வயது 27). இவர் நாமக்கல் மாவட்டம் மோர்பாளையத்தி்ல் உள்ள வங்கியில் உதவி அலுவலராக வேலைபார்த்து வந்தார்.இதனால் அங்கேயே வீடு எடுத்து தங்கியிருந்தார்.
இந்நிலையில் திடீரென பூச்சி மருந்தை குடித்து விட்டார். ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.அங்கு சிகிச்சை பெற்று வந்த அருண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
கடந்த சில மாதங்களாக அருண் உடல்நலம் பாதித்து அவதிப்பட்டு வந்ததாகவும், அதனால் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.இதுகுறித்து நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அருணின் உடல் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.